இணையதளச் செய்திப் பிரிவு
சிலருக்கு சாப்பிடாமலேயே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு இருக்கும். வயிறு வீங்கியிருப்பது போலத் தோன்றும்.
வயிற்றில் இறுக்கம், அழுத்தம், செரிமானப் பகுதியில் அல்லது குடலில் வாயு அடைந்திருப்பது உள்ளிட்டவை காரணங்களாக இருக்கலாம்.
முன்பு சாப்பிட்ட உணவுகள், ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
சாப்பிட்டவுடன் வயிறு வீங்கினால் அது செரிமானக் கோளாறாக இருக்கலாம். எனவே, செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் மெதுவாகச் சாப்பிட வேண்டும்.
உடலில் வாயு சேரும் சில உணவுகளைத் தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தைக் குறைப்பது உதவும்.
இதற்கு முன்னதாக சாப்பிட்ட சில உணவுகள் செரிமானம் ஆகாமலும் இருக்கலாம்.
அந்த உணவுகள் செரிமானம் ஆவதற்கு இஞ்சி, வெள்ளரிக்காய், பப்பாளி, சீரகம், அன்னாசி, புதினா போன்ற உணவுப் பொருள்களை சேர்த்துக்கொள்ளலாம்.
அதிகமாக சாப்பிடுவது, அதிக கொழுப்பு அல்லது எண்ணெய் உள்ள உணவுகளைச் சாப்பிட்ட பின்னர் வெந்நீர் குடிக்கலாம், சீரகத் தண்ணீர், சோம்பு நீர், இஞ்சி டீ போன்றவற்றை குடிக்கலாம். இதனால் எளிதாக செரிமானம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.