மாரடைப்பு வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்?

இணையதளச் செய்திப் பிரிவு

இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றைய காலத்தில் இளைஞர்கள்கூட அதிகமாக மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நாம் அன்றாடம் சில உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலமாக இதய நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பச்சை இலை காய்கறிகளான கீரை, முட்டைக்கோஸ், புரோக்கோலி, புதினா, கொத்தமல்லி தழைகள் ஆகியவற்றில் தினமும் ஒன்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக இதய நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

பெரும்பாலும் உடலில் அதிக கெட்ட கொழுப்புகள் சேரும்போதுதான் இதயத்தின் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கேரட், ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பேரிக்காய், திராட்சை உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

தயிர், கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது குறைந்த கொழுப்புள்ள பால், சால்மன் போன்ற எண்ணெய் நிறைந்த மீன்கள் எடுத்துக்கொள்ளலாம்.

சைவம் என்றால் பருப்பு வகைகள், சுண்டல், பச்சைப்பயறு போன்ற தானியங்கள், டோஃபு ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம்.

நட்ஸ் வகைகள் மற்றும் ஆலிவ், சூரியகாந்தி எண்ணெய்களை அளவோடு பயன்படுத்துவது ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழு செய்திக்கு...