இணையதளச் செய்திப் பிரிவு
உடல் பருமன் மற்றும் அதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன.
அரிசி, கோதுமை மற்றும் முழு தானியங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது, இது ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதய பாதிப்புகள் ஏற்படலாம்.
சோடியம் அதிகமுள்ள பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது. உப்புதான் ரத்த அழுத்தத்திற்கு எதிரி, இது அமைதியாக இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உப்பை அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள்.
கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், பேக்கிங் உணவுகள், துரித மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரையையும் முடிந்தவரை குறைக்க வேண்டும், செயற்கை குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மது, புகைப்பழக்கமும் இதயத்திற்கு நல்லதல்ல. தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி குறைந்தது நடைப்பயிற்சியாவது அவசியம்.
வீட்டில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுங்கள். மஞ்சள், இஞ்சி, சீரகம், எலுமிச்சை போன்றவற்றை உணவுகளில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.