தினமணி செய்திச் சேவை
வங்கதேச முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சித் தலைவருமான கலீதா ஜியா உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு காலமானார்.
1945 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் பிறந்த கலீதா ஜியா, இந்தியப் பிரிவினையின் போது குடும்பத்தினருடன் வங்கதேசத்துக்குக் குடிபெயர்ந்தனர். இவரது தந்தை ஒரு தேனீர் வியாபாரி.
வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தலைவரான கலீதா ஜியா, மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளார். முதல்முறையாக 1991 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்று 1996 வரை ஆட்சியிலிருந்தார்.
1999 ஆம் ஆண்டு வங்கதேச அரசுக்கு எதிராக 400 கி.மீ. பேரணியாக சென்றார் கலீதா ஜியா. அதைத் தொடர்ந்து 2001 தேர்தலில் வெற்றி பெற்று 2006 வரை பிரதமராகப் பதவி வகித்தார்.
பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் பெனசீர் பூட்டோவுக்குப் பிறகு ஒரு முஸ்லீம் நாட்டை வழிநடத்திய இண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் கலீதா பெற்றுள்ளார்.
ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் ஊழல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இடைக்கால பிரதமரான முகமது யூனுஸ் அரசால் சிறையில் இருந்து விடுக்கப்பட்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கலீதா ஜியா சந்தித்தபோது...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.