இணையதளச் செய்திப் பிரிவு
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பரமபதவாசல் அதிகாலை 5.45 மணிக்கு திறக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு காலை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக உற்சவர் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வைகுந்த ஏகாதசியையொட்டி .பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பென்னாகரம் அருகே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அளேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி பரமபத வாசலின் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பரமபத வாசலில் எழுந்தருளிய பார்த்தசாரதி பெருமாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.