பெண்கள் குண்டாவதற்கு இதுதான் காரணம்!

இணையதளச் செய்திப் பிரிவு

பெண்கள் பலருக்கும் தற்போது உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரிக்கிறது.

இளம்பெண்கள் பிசிஓஎஸ், கருப்பையில் நீர்க்கட்டிகள், மாதவிடாய் சுழற்சி ஒழுங்கின்மை உள்ளிட்டவற்றால் திருமணத்திற்குப் பின்னரும் கர்ப்பமாவதில் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.  

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால்...

பெண்களுக்கு உணவுப்பழக்கவழக்கம் சரியாக இருப்பதில்லை. என்ன சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுகிறார்கள்.

பெண்கள் பலரும், வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டுமுடித்து மீதமான அல்லது பழைய உணவையே சாப்பிடுகிறார்கள். சிலர் வீணாகிவிடக்கூடாது என்ற நோக்கத்தில்கூடுதலாகச் சாப்பிடுகிறார்கள்

சமச்சீரான, அளவான உணவு இல்லையெனில் பெண்களுக்கு வளர்சிதை மாற்றக் கோளாறுகள், உடல் பருமன் ஏற்படும் அபாயம் அதிகம். தாமதமாகச் சாப்பிடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

உடல் எடை, ரத்த அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், இதர உடல்நல பிரச்னைகள் குறித்து அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தைப் பேணுவதும் அவசியம்.

கர்ப்ப காலத்தில் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் காலத்தில் அதைச் செய்வதில்லை.

பெண்கள் தங்களுடைய உடல்களைப் புரிந்துகொள்ள வேண்டும். உணவு உங்களுக்கு ஆற்றலையும் மகிழ்ச்சியையும் அளித்தால் அது நல்லது. அதுவே உங்களை மந்தமாகவோ அல்லது அசௌகரியமாகவோ உணர வைத்தால், அது ஆரோக்கியமானதல்ல.

அதனால் பெண்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் கொண்டு, சரியான அளவில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதுடன் உடற்பயிற்சி செய்வதும் மன அழுத்தத்தை நிர்வகிப்பதும் உடல் பரிசோதனைகளை அவ்வப்போது செய்வதும் அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...