வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

குடும்பப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு உண்டு. தொழிலில் ஆதரவு அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியடைவீர்கள். செல்வாக்கு உயரும்.உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். வியாபாரிகள் போட்டிகளில் இருந்து விடுபடுவீர்கள். விவசாயிகள் மகசூலில் லாபம் பெறுவீர்கள்.அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை முடிப்பதில் சிரமம் ஏற்படும். கலைத் துறையினருக்கு நேரிட்ட தடைகள் விலகும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் கூடும்.சந்திராஷ்டமம் - ஜனவரி 24, 25.

தொழிலில் பொறாமை குறையும். பொறுமையுடன் செயல்படுவீர்கள். உடனிருப்போர் மதிப்புடன் நடப்பார்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் தக்க நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய முறையில் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடப்பீர்கள். பெண்கள் உறவினர்களின் வருகையால் மகிழ்வீர்கள். மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்வீர்கள்.சந்திராஷ்டமம் - ஜனவரி 26, 27, 28.

தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தடைகள் குறையும். பிறருக்கு உதவும்போது சூழ்நிலைகளுக்கேற்ப செயல்படுவீர்கள். புதிய வாகனங்களுக்கு பராமரிப்பு செலவைச் செய்வீர்கள்.உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய கடன்களைத் தர வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளால் பலன் அடைவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குழந்தைகளால் மகிழ்வீர்கள். மாணவர்கள் பயிற்சிகளை அதிகரிப்பீர்கள்.சந்திராஷ்டமம் - ஜனவரி 29, 30.

சமூகத்தில் உயர்ந்தோரிடம் நட்பு உண்டாகும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஆர்வம் கூடும். பழைய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரிகள் கூடுதல் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருள்கள் அதிகரிக்கும்.அரசியல்வாதிகளுக்கு மரியாதை அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு வருவாய் கூடும். பெண்கள் குழந்தைகளைக் கவனிப்பீர்கள். மாணவர்கள் கடுமையான உழைப்பால் வெற்றி பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

சிந்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தனிப்பட்ட விஷயங்களில் தலையிட மாட்டீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும். வருமானம் சீராக இருக்கும்.உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவு உண்டு. வியாபாரிகளின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விவசாயிகள் பயிர்களை நன்கு பராமரிப்பீர்கள்.அரசியல்வாதிகள் பதவிகளைத் தக்கவைப்பீர்கள். கலைத் துறையினர் துறையில் புதுமைகளைப் புகுத்துவீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம் - இல்லை.

தொழிலில் மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வருமானத்தை அதிகரிக்க முயற்சிப்பீர்கள். செல்வாக்கு உயரும்.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பேச்சை கேட்டு நடப்பீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

சுய மரியாதையை விட்டுக் கொடுக்காமல் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மனோபலம் கூடும். கடன்கள் வசூலாகும்.உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிக்க நேரிடும். விவசாயிகள் வருமானம் குறையாது.அரசியல்வாதிகள் அதிக முயற்சியுடன் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு வீண்செலவுகள் ஏற்படும். பெண்கள் தாய்வழி உறவினர்களால் மகிழ்வீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.சந்திராஷ்டமம் - இல்லை.

நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உடனிருப்போருடன் ஒற்றுமை ஓங்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். போட்டிகள் இருக்காது.உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளை அவசரப்பட்டு செய்ய வேண்டாம். விவசாயிகள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள்.அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைப்பீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களுக்கு உதவுவீர்கள். பெண்கள் பெற்றோரின் உடல்நலக் குறைவால் வருத்தம் அடைவீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

பெற்றோருடனான சுமுக உறவு மேம்படும். குடும்பத்தில் நல்லதொரு மாற்றம் உண்டாகும். எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள் யோகா கற்பீர்கள்.உத்தியோகஸ்தர்கள் தைரியத்துடன் எதையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைப் பெறுவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் கூடும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆதரவாய் இருப்பார்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

வழக்குகளில் தாமதம் ஏற்படும். பிரச்னைகளுக்கு அமைதி காண்பீர்கள். பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்பீர்கள். முன்யோசனையுடன் செயல்படுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்படும். வியாபாரிகள் தடைகளையும் எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள். விவசாயிகள் சந்தையில் நிலவும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் உண்டாகும். கலைத் துறையினருக்கு அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் உடல்நலத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். நேர்வழியில் சிந்திப்பீர்கள். ரகசியங்களை காப்பீர்கள். தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் பாராட்டுகளால் மகிழ்வீர்கள். வியாபாரிகள் செலவுகளைக் குறைப்பீர்கள். விவசாயிகள் கவனத்துடன் இருக்கவும்.அரசியல்வாதிகள் மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள். கலைத் துறையினர் திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். பெண்களுக்கு கணவருடனான அந்நியோன்யம் மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் சற்று கவனக் குறைவு ஏற்படலாம்.சந்திராஷ்டமம் - இல்லை.

தொழில் சீராக நடக்கும். கடன் வாங்க மாட்டீர்கள். செயல்களை ஆர்வத்துடன் செய்வீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள்.உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் தக்க நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரிகளின் செயல்கள் வெற்றி அடையும். விவசாயிகள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் பாராட்டுகள் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...