ஜோதிடர் பார்வதி தேவி
ஒருவரின் பிறந்த நட்சத்திரம் சுபம் மற்றும் அசுப தன்மை பொறுத்து அவரின் வாழ்க்கை அமையும்.
கடவுளின் துணை கொண்டு ஒருவரின் பிறவி நோக்கம் எது என்பதை ஜென்ம நட்சத்திரம், ராசி, லக்கினம் மற்றும் அவற்றோடு தொடர்பு கொண்ட கிரகம் சொல்லிவிடும்.
ஒரு சிலர் ஜென்ம நட்சத்திரம் அன்று எதுவும் செய்ய மாட்டார்கள். ஒருசில முக்கிய செயல்களை ஜென்ம நட்சத்திரத்தில் செய்யலாம்.
ஆங்கில தேதி தவிர்த்து, முடிந்தவரை நாம் ஜென்ம நட்சத்திரம் அன்றுதான் பிறந்த நாளை கொண்டாடுவது நன்று.
ஜாதக ரீதியான பரிகாரம் மற்றும் குலசாமி வழிபாடு செய்வதன் மூலம், ஒருவரின் பலமற்ற ராசியை சிறிதளவு பலப்படுத்தலாம்.
ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தில் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நன்று. அவரின் நட்சத்திரம் பலம் பெரும் அதோடு அவரின் உயர்வுக்கு கடவுள் வழி காட்டுவார்.
பிரம்மன் தன் படைப்பு தொழில் கொண்டு ஜீவ ராசிகளை ஒரு தேவ ரகசியத்தோடு உருவாக்கினார்.
எம்பெருமானுடைய அனுகிரகத்தை கொண்டு, படைக்குப்பொழுது நான்முகனான பிரம்மன்- ஆயுள், தொழில், பொன், வித்தை, செல்வம், எழில், மரணம் ஆகிய ஏழும் ஒரு ஜீவராசிக்கு எப்படி அமைய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.