DIN
வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திர நாளே வைகாசி விசாகமாகும்.
வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் நம்மை வந்து சேரும்.
முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் இருந்தாலும், வைகாசி விசாக விழா வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது.
நினைத்தது நடக்கவும், வேண்டுதல்கள், வழிபாடுகளும் இரு மடங்கு பலனை அள்ளி தர வைகாசி விசாக நாளில் விரதமிருந்து, முருகப் பெருமானை மனம் உருக வழிபட வேண்டும்.
இன்றைய நாளில் முருகப்பெருமானுக்குரிய மந்திரங்கள், பதிகங்கள் முதலானவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.
'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையோ. 'ஓம் சரவண பவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தையோ உச்சரிக்கலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்க அனைத்து பலன்களும் கிடைக்கும்.
ஏழைகளுக்கு எலுமிச்சை சாதம். குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை தானம் செய்தால் திருமண பேறு கிட்டும்.
கடன், வழக்கு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்தும் விடுபட முருகனை வைகாசி விசாக நட்சத்திர நாளில் வணங்கி வளம் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.