லாபம் அதிகரிக்கும் ராசி எது? வார பலன்கள்!

DIN

பணப் புழக்கம் சரளமாக இருக்கும். விடாமுயற்சி வெற்றி பெறும். உடனிருப்போர் தேவையான ஆதரவை நல்குவார்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும். விவசாயிகள் கால்நடைகளால் வருமானத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் பிடிவாதங்களை விட்டுவிடவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் கணவரின் முழு ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். பெண்கள் படிப்பில் அக்கறையோடு செயல்படுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

மனதுக்கினிய பயணங்களைச் செய்வீர்கள். குடும்பத்தில் புரிதல்கள் அதிகரிக்கும். காரியங்களில் அலைச்சல் ஏற்பட்டாலும், சாதகமாக முடிவடையும். சிலர் புதிய வீடுகளுக்கு மாறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் புதிய சூழலைக் காண்பீர்கள். வியாபாரிகள் புதிய இடங்களுக்குச் செல்வீர்கள். விவசாயிகள் குத்தகை பாக்கிகளை வசூலிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கவனத்துடன் செயல்படவும். கலைத் துறையினர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு பணவரவு உண்டு. மாணவர்கள் உயர்கல்விக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

ஆக்கபூர்வமான சிந்தனைகள் செயல்வடிவம் பெறும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும், மனவளமும் சிறக்கும். பணப்புழக்கத்துக்கு குறைவு இருக்காது.

உத்தியோகஸ்தர்கள் விட்டுக் கொடுத்து பழகுவீர்கள். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்ப்பீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளிடம் மேலிடம் அனுகூலமாகவே நடக்கும். கலைத் துறையினருக்கு தேவையான அங்கீகாரம் கிடைக்கும். பெண்களுக்கு மதிப்பு உயரும். மாணவர்கள் தேவையற்ற பிரச்னைகளில் விலகிவிடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

பெற்றோரின் ஆதரவு சிறக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரத் தொடங்கும். போட்டிகளைச் சாதுர்யமாக எதிர்கொள்வீர்கள். அரசு

ஆதரவு உண்டு. உத்தியோகஸ்தர்கள் கவனத்துடன் இருக்கவும். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்படவும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் கொடுத்த பொறுப்புகளைக் கவனத்துடன் செய்வீர்கள். கலைத் துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கும். பெண்கள் குழந்தைகளால் மகிழ்வீர்கள். மாணவர்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

குடும்பத்தில் இணக்கம் கூடும். தோற்றப் பொலிவு அதிகரிக்கும். கடன் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். சமூகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும். வியாபாரிகள் சில சூட்சுமங்களை அறிவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் வருவாயைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் கடமைகளை உணர்வீர்கள். பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

புத்தி சாதுர்யத்துடன் செயல்படுவீர்கள். சுபச் செய்திகளால் மன நிம்மதி அடையும். புனிதப் பயணங்கள் செய்யும் வாய்ப்பு இருக்கும். உடல் ஆரோக்கியமும் மனவளமும் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு உதவுவீர்கள். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறப்பீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினர் சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். மாணவர்கள் யோகா, தியானம் கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தடைபட்ட காரியங்கள் நடந்தேறும். விவேகத்துடன் செயல்படுவீர்கள். புதிய விஷயங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வயிற்று

உபாதைகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகள் வியாபாரத்தில் மேன்மையை அடைவீர்கள். விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்களுக்கு உறவினர்களிடம்

நன்மதிப்பு உண்டு. மாணவர்கள் ஆர்வத்துடன்

அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

விழிப்புணர்வுடன் இருப்பீர்கள். பயணங்களில் அனுகூலம் ஏற்படும். குழப்பங்களில் தெளிவும் கிடைக்கும். குழ்தைகள் அறிவுரைகளைக் கேட்டு நடப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி பிரசாரத்துக்கு நேரம் ஒதுக்குவீர்கள். கலைத் துறையினருக்கு பணவரவு சீராகும். பெண்கள் குடும்ப ஒற்றுமையைப் பேணி காப்பீர்கள். மாணவர்கள் தைரியத்துடன் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 30.

புதிய அனுபவம் ஏற்படும். புதிய நண்பர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தோர் ஆதரவாக இருப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையுடன் பழகுவீர்கள், வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். விவசாயிகள் நல்ல லாபத்தை காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 31, ஜூன் 1.

வீட்டிலும், வெளியிலும் செல்வாக்கு உயரும். முக்கிய தருணங்களில் சமயோஜித புத்தி கைகொடுக்கும். செயல்களில் முட்டுக்கட்டைகள் விலகும். வருமானம் உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் ஊடுபயிர்களால் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களால் மகிழ்வீர்கள். கலைத் துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு சிறக்கும். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபாட்டை அதிகரிப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 2, 3.

குடும்பத்தினர் விட்டு கொடுத்து நடப்பீர்கள். பெற்றோர் ஆதரவும் பெருகும். மருத்துவச் செலவுகள் குறையும். விரயங்கள் எதுவும் ஏற்படாது.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வைப் பெறுவீர்கள். விவசாயிகள் தனித்துச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் நிலுவைத் தொகையை வசூலிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் நற்பெயரை எடுப்பீர்கள். கலைத் துறையினர் புகழைத் தக்க வைப்பீர்கள். பெம்கள் பிறரிடம் அன்பாகவும், கனிவுடனும் பேசுவீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - ஜூன் 4, 5.

காரியங்கள் எதிர்பார்த்த முடிவைக் கொடுக்கும். பெயரும் புகழும் அதிகரிக்கும். போட்டிகள் ஏற்படாது. உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளைத் தேடி செல்வீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருப்பீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாணவர்கள் விளையாடும்போது கவனம் தேவை.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..