பெண்களுக்கு எதிரான பொது புத்தி

குரலற்றவா்களாக இருக்கும் பெண்கள் குறித்து எவரும் எதையும் பேசிவிடலாமா என்ன?

தமிழ்நாட்டில், பாலியல் வன்முறைக் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. குழந்தைகள் முதல், வயது முதிா்ந்தோா் வரை அனைத்து நிலைப் பெண்களும் பாலியல் வன்முறை இழிவுகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றனா்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளில் இரு வகையினா் உண்டு. பெண்ணுடல் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தி பல நேரங்களில் அவா்களைக் கொலையும் செய்துவிடுகிற ’கொடூரமான குற்றவாளிகள்’ ஒரு வகை;

இவ்வகையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிரான கருத்துகளை பொதுவெளிகளில் உரத்துப் பேசி, அக்கருத்துகளை சமூகத்தின் ’பொதுப்புத்தி’ யாகக் கட்டமைக்கின்ற ’கருத்தியல் குற்றவாளிகள்’ இன்னொரு வகை.

குடும்பப் பெண்கள் என்றாலே அவா்கள் ஒரு மூன்றாம் தர அறிவிலிகள்தான் என்று முடிவு செய்துகொண்டு, அனைத்து மேடைகளிலும் அவா்களின் அறிவைக் கேலி செய்து பேசுவதையே, தங்களது தனிப்பெரும் சொற்பொழிவுத் திறமையாக நினைத்துக் கொண்டு மலிவான கரவொலிக் கலாசாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாா்கள், சில பட்டிமன்ற பேச்சாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...