ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் மஞ்சள்!

உடல் ஆரோக்கியத்திற்கும் சரி, சரும அழகுக்கும் சரி மஞ்சள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவிலும் சருமத்திற்கும் மஞ்சள் சேர்ப்பதன் மூலமாக பல்வேறு வகை நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க முடியும்.

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு கருந்துளசியைச் சேர்த்து மைபோல அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.

எத்தகைய வீக்கமாக இருந்தாலும் மஞ்சளை அரைத்து கனமாக பற்றுப்போட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

மஞ்சள் தூளை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடித்தால் ஜலதோஷம் விரைவில் குணமாகும்.

புதினா சாற்றில் தேனும் எலுமிச்சைச் சாறும் கலந்து தினமும் ஒரு டம்ளர் அருந்தி வந்தால் பெருத்த உடல் இளைத்து அழகான தோற்றம் பெறலாம்.

இஞ்சியையும் புதினாவையும் மிதமாக புளி, உப்பு, காரம் சேர்த்து அரைத்து துவையலாகச் செய்து சாப்பிட்டு வர, ஜீரண நோய்கள் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...