தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் கணினியில் வேலை, குழந்தைகளுக்கு இணையவழி வகுப்புகள், பொழுதுபோக்கு என கணினி, ஸ்மார்ட்போன், டிவி பயன்பாடு இப்போது அதிகரித்துவிட்டது.
ஸ்மார்ட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதும் கணினித் திரைகளைத் தொடர்ந்து பார்க்கும்போதும் தசைகள் மற்றும் முதுகின் கீழ் உள்ள டிஸ்க்குகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இடைவெளி விட்டு திரை சாதனங்களைப் பயன்படுத்துவது பிரச்னைகளைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
கணினியில் வேலை செய்வோர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 -3 நிமிடங்கள் உடலுக்கு சிறு அசைவு கொடுப்பது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
பல மணி நேரம் ஒரே இடத்தில அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். நன்றாக நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இருக்கையில் இருந்து எழுந்து நிற்பது, நடப்பது, தோள்பட்டையை அசைப்பது, கழுத்தைத் திருப்புவது , உட்கார்ந்துகொண்டே உடலைத் திருப்புதல் போன்ற எளிய பயிற்சிகளைச் செய்யலாம்.
குழந்தைகளும் நீண்ட நேரம் திரை முன் அமர்ந்திருப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும், அவர்கள் வெளியில் விளையாட ஊக்குவிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.