திருக்கடையூர் கோயிலின் ரகசியம் தெரியுமா?

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர்களும் அருளிய திருப்பதிகங்களைப் பெற்று விளங்குவது திருக்கடவூர் என்னும் திருக்கடையூர் திருத்தலமாகும்.

மார்க்கண்டேயர் இங்கு இறைவனைப் பூசிக்கின்றபோது உயிர் கவர வந்த யமனை இறைவன் சம்ஹரித்தருளியதால், அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.

அபிராமி அம்மனின் அருள்பெற்ற அபிராமி பட்டர் அந்தாதி பாடி அரசனுக்கு அமாவாசையை பௌர்ணமியாக்கி காட்டியது.

இத்தலத்தின் மூலவர் அமிர்தகடேஸ்வரர். இறைவி அபிராமி அம்பாள்.

பக்தர்கள் அவரவர் ஜென்ம நட்சத்திரம் அன்று வழிபட்டால் ஆயுள் விருத்தி ஏற்படும்.

சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், ஜென்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் ஏற்ற தலம்.

விநாயகரின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகக் கருதப்படும் அமிர்த கலசத்துடன் காட்சிதரும் கள்ள வாரணப் பிள்ளையாரை தரிசனம் செய்யலாம்.

இந்தக் கோயிலில் சித்திரை மகோற்சவம் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி, மே 2-ஆம் தேதி தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.

முக்கிய நிகழ்வான ஏப். 23 இரவு திருக்கல்யாணம், ஏப். 26 காலை பாலாம்பிகா சமேத காலசம்ஹாரமூர்த்தியின் வீரநடன தரிசனமும், இரவு 9 மணிக்கு மேல் காலசம்ஹார பெருவிழா நிகழ்ச்சியில் எமதர்மராஜன் வதம், அனுகிரகம் நிகழ்ச்சிகளும் நடக்கும். ஏப்ரல் 28 காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 - 9 வரையும் கோயில் திறந்திருக்கும். மயிலாடுதுறையில் இருந்து பொறையார் செல்லும் பேருந்து மார்க்கத்தில் சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்