உதடுகள் வெடிப்பா? என்ன செய்யலாம்?

சிலருக்கு உதடுகள் எப்போதும் வெடித்துக் காணப்படும், உதட்டில் எச்சிலைத் தடவிக்கொண்டே இருப்பார்கள், வெடிப்பு அதிகமாகி உதடுகளில் இருந்து ரத்தம்கூட வரும்.

குளிர்ந்த காலநிலை, அதிக வெப்பம், நீர்ச்சத்து குறைவு, உதட்டில் சுரக்கும் சுரப்பிகள், சில அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்ட காரணங்களால் உதடுகளில் வெடிப்பு ஏற்படலாம்.

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், தேன், வெண்ணெய், கற்றாழை, பழச்சாறுகளை உதடுகளில் தடவலாம்.

நெல்லிக்காய், ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி சத்துள்ள பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக ரசாயனம் இல்லாத தயாரிப்புகளை உதடுகளுக்கு பயன்படுத்துங்கள். ஏனெனில் அவற்றில் உள்ள ரசாயனமும் உதடுகள் வெடிப்புக்குக் காரணமாகலாம். உதடு வெடிப்பு நீண்ட நாள்கள் இருக்கும்பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.

மாறாக, உதடு காய்ந்திருக்கிறது என்று உதட்டை எச்சிலால் ஈரப்படுத்துவதோ உதட்டைக் கடிப்பதோ கூடாது. எச்சிலில் இருக்கும் பாக்டீரியா உதட்டில் புண்களை ஏற்படுத்தலாம். அதேபோல ஈர்ப்பதத்துக்கு நாம் உதட்டில் எச்சிலைத் தடவினால் உண்மையில் அது வறட்சியைத்தான் ஏற்படுத்தும்.

தூங்கச் செல்லும் முன்பாக உதடுகளில் இருக்கும் லிப்ஸ்டிக்கை அகற்றுவதும் உதடு வறட்சியைக் கட்டுப்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...