கோடையில் தக்காளி சாப்பிடுவதால் உடல் சோர்வு, உடல் சூடு ஆகியவை தணியும். வெப்பத்திலிருந்து காக்கும்.
தக்காளியில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, பி போன்ற சத்துகள் இருக்கின்றன. நீர்ச்சத்தும் அதிகம் இருக்கிறது. மாவுச்சத்து நான்கு சதவீதம் உள்ளது. ஆனால், வைட்டமின் ஏ-யும் வைட்டமின் சி- யும் அதிகமாக இருக்கிறது.
தக்காளியைச் சாப்பிட்டு வந்தால் பார்வை கூர்மையாக இருக்கும். மாலைக்கண் வியாதி வராமல் தடுக்கும்.
தக்காளியை அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் சிரமமில்லாமல் பிரியும். அதன் மூலமாக நோய்க் கிருமிகள் வெளியேற்றப்படுகின்றன. சிறுநீரகக் கோளாறு, அஜீரணம், மலச்சிக்கல், ரத்த சோகை போன்றவை எளிதில் குணமாகின்றன.-
ரத்தம் சுத்தமாகும். இதில் மாவுச்சத்து குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.
இதய நோய்களுக்கும் நிவாரணமாக இருக்கும். உடல் எடையைக் குறைக்கவும் தக்காளி உதவும் என்று கூறப்படுகிறது.
இதுதவிர சருமப் பாதுகாப்பு, புற்றுநோயைத் தடுக்கும் தன்மை, கண் பார்வை மேம்பாடு ஆகியவற்றுக்கு தக்காளி உதவும்.