நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பயன்படுத்தக்கூடிய வெந்தயம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகுக்கிறது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன.
இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது.
இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப்போக்கை குணமடையச் செய்வதோடு, தாய்ப்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. சர்க்கரை வியாதி குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது.
வயிறு தொடர்பான பிரச்னைகள், வாயுத் தொல்லை ஆகியவற்றுக்கும் வெந்தயக் கீரை உதவும்.
பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்னையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது.
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை விழுதாக அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது.