இணையதளச் செய்திப் பிரிவு
2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை. ஆனால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி பங்குச்சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பட்ஜெட் அறிவிப்பால் பங்குச்சந்தை இன்று உயர்வுடன் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடுமையாக சரிவுடன் வர்த்தகமானது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,843.43 புள்ளிகள் குறைந்து 80,722.94 புள்ளிகளிலும் நிஃப்டி 593.45 புள்ளிகள் குறைந்து 24,825.45 புள்ளிகளிலும் நிலை பெற்றது. பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு இன்றைய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சரின் ஒரு அறிவிப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது.
சந்தையில் நிலவும் அதிகப்படியான ஊக வணிகத்தைக் (Speculative Trading) கட்டுப்படுத்தும் நோக்கில், பங்குச்சந்தைகளில் பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் செலுத்தப்படும் வரியான பங்குகள் பரிவர்த்தனை வரியை(Securities Transaction Tax) உயர்த்தி அறிவித்தார்.
இதன்படி ஃபியூச்சர்ஸ் மீதான வரி 0.02%ல் இருந்து 0.05% ஆகவும் ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான வரி 0.1%ல் இருந்து 0.15% ஆகவும் உயர்த்தப்படுகிறது. இந்த வரி உயர்த்தப்பட்டது வர்த்தக முதலீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
கடந்த 6 ஆண்டு பட்ஜெட் நாள்களில் இன்றைய நாள் பங்குச்சந்தைக்கு மிகவும் மோசமான நாள் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.