வங்கிகளில் வைப்புத்தொகையை அதிகரிக்க...

எஸ். ராமன்

வைப்புத் தொகை அதிகரிப்பு உள்பட, வங்கித் துறையின் வளர்ச்சிக்கு தேவையான பல அம்சங்கள் இந்தக் குழுவின் ஆலோசனைக்கு உட்படுத்தப்படும்' என்று நிதித் துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், வங்கித் துறையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்பதை இந்தக் குறிப்பீடுகள் உணர்த்துகின்றன.

வங்கித் துறை என்பது, நாட்டு பொருளாதாரத்தை முன்னிழுத்துச் செல்லும் என்ஜின்களில் ஒன்றாகும்.

அண்மைக்காலங்களில் பங்குச் சந்தை, பரஸ்பர நிதித் திட்டங்கள் (மியூச்சுவல் ஃபண்ட்ஸ்), தொழில் நிறுவனக் கடன் பத்திரங்கள் போன்றவை அதிக வருவாய் ஈட்டித் தரும் முதலீடுகளாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஆரம்பத்தில், 11 ஆயிரம் கோடிகளாக இருந்த, பங்குச் சந்தையில் பங்கு கொள்வதற்குத் தேவையான "டிமாட்' கணக்குகள், 2025-ஆம் ஆண்டு முடிவில் 21.6 ஆயிரம் கோடிகளாக அதிகரித்திருக்கின்றன.

முதலுக்கு மோசம் செய்யாத வங்கி வைப்புத்தொகைகள்தான் எதிர்கால பாதுகாப்புக்கு உகந்தது என்ற நடைமுறைச் சித்தாந்தத்தை, முதலீட்டாளர்கள் மறக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதுதான் உண்மை.

வங்கி வைப்புத்தொகைகள் மீது பெறப்படும் வருவாய்க்கு, வரி செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டால், முதலீடுகள் வங்கிகள் நோக்கி நகருவதற்கான சாத்தியக்கூறுகள் பெருமளவில் உள்ளன.

வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் வைப்புத்தொகைகள்தான், வங்கிகளின் முக்கிய நிதி ஆதாரம் ஆகும்; அந்த ஆதாரத்தின் அளவு, வழங்கப்படும் கடன் தொகையைவிட அதிகமாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால், அது பல எதிர்மறை விளைவுகளுக்கு வித்திட்டு விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க..