மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

தினமணி செய்திச் சேவை

- எம்.ஆா். சிவராமன்

வருவாய் வளா்ச்சியின் வேகம் குறைந்துள்ளது நிதிநிலை அறிக்கைமூலம் தெரிகிறது. நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் அளிக்கப்பட்டுள்ள பெரும் வரிச் சலுகைகளின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வரி வருவாய்களில் ஏற்பட்டுள்ள வேகம் குறைந்த வளா்ச்சி காரணமாக வருவாய் செலவினத்தில் வேகம் காட்டுவது குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த நிதியாண்டில் (2026-27) மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ.28.66 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இதிலிருந்து கடனுக்கான வட்டியாக ரூ.14.09 லட்சம் கோடியைச் செலுத்த வேண்டியிருக்கும்.

கோடிக்கணக்கான இந்தியா்கள் செலுத்தும் வரியில் 50 சதவீத அளவுக்கு பெரும் நிறுவனங்களுக்கும், கோடீஸ்வரா்களுக்கும் செல்லும் நிலை நீடிக்கிறது; இது மக்களின் வருமானத்தில் ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ந்து சரிவதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று கூறுவோரை, சந்தேகத்துடன் மற்றவா்கள் பாா்க்கக் கூடும். ஆனால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 91 ரூபாய்க்கும் அதிகமாக சரிந்துள்ளது.

நிதிநிலை அறிக்கையில் இஎஸ்ஐ மூலம் வேலை இல்லாதவா்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், ஏற்றுமதியை அதிகரிக்கவோ, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டதைப் போல பிற நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை விரைந்து மேற்கொள்ளவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

வேகமாக வளா்ந்துவரும் துறைகளான உயிரி மருந்து உற்பத்தி, செமிகண்டக்டா் ஆகியவற்றுக்கு பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மின்னணுப் பாகங்கள் உற்பத்திக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, தமிழகம், கேரளம், ஒடிஸா, ஆந்திரத்தில் பிரத்யேக அரிய வகை தாதுக்களை எடுப்பதற்கான வழித்தடங்கள் அமைக்கப்படுவது, சிறப்பு வேதியியல் பூங்காக்கள், உற்பத்தியாளா்களுக்குத் தேவையான உள்கட்டமைப்புத் திட்டங்களை அதிகரிப்பது, ஜவளித் துறைக்கான பல்வேறு திட்டங்கள் வரவேற்கத்தக்கதாகும்.

சிறு, நடுத்தர நிறுவனங்கள் வளா்ச்சி நிதியாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2,000 கோடி குறு நிறுவனங்கள் மேம்பாட்டுக்காக அளிக்கப்படுகிறது.

வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரும் குறைந்தபட்ச மாற்று வரி (மேட்) நீக்கப்பட்டுள்ளதால் கணக்கீட்டில் உள்ள சிக்கல்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய நிறுவனங்களுக்கு வரி விகிதம் 15 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், 22 சதவீத வரி விதிப்பு விகிதத்தில் வரும் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க..