மகாகவியும் ஏ.ஐ. தொழில்நுட்பமும்...

முனைவர் பவித்ரா நந்தகுமார்

நடுப்பக்கம்
  • முன்பு புத்தகங்களை மட்டுமே வாசித்து வந்த நிலையில், இன்று ஏ.ஐ. தொழில்நுட்பம் வாசிப்பு அனுபவத்தை முழுமையாக மாற்றி அமைத்துள்ளது.

  • நெட்பிளிக்ஸ், யூடியூப் போன்றே இப்போது நூலகங் களும் மின் புத்தகத் தளங்களும் வாசகரின் ரசனைக்கு ஏற்ப புத்தகங்களைப் பரிந்துரைக்கின்றன.

  • படைப்பாற்றல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்ற நிலை மாறி, இன்று ஏ.ஐ. ஒரு சிறந்த சக படைப்பாளியாக உருவெடுத்துள்ளது.

  • மொழியில் ஏற்படும் இலக்கணப் பிழைகளை திருத்தித் தர ஆரம்பித்த இந்த ஏ.ஐ. இன்று ஒரு வாக்கியத்தை இன்னும் எப்படி அழகாக எழுதலாம் என்பதற்கு ஆலோசனையும் வழங்குகிறது.

  • ஒரு நாவலை மொழிபெயர்க்க ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்ட நிலையில், ஏ.ஐ. வரவால் மூன்று மாதங்களிலேயே முடித்துவிடக் கூடிய நிலை. அதிலும், இயந்திரத்தின் உழைப்பை இறுதிப் படுத்த மனிதன் எடுத்துக் கொள்ளும் நேரம்தான் அது என்கிறார்கள்.

  • முன்பெல்லாம் பத்திரிகைகளில் கதை, கட்டுரை, கவிதைக்கு ஏற்றவாறு ஓவியர்கள் படம் வரைவார்கள். இப்போது பெருவாரியான இடங்களில் ஏ.ஐ. வரைந்து கொடுக்கும் படங்களையே காண நேரிடுகிறது.

  • எழுத்தாளர் என்பவர் தன்னுடைய சொந்த அனுபவத்தின், அறிவின், கற்பனையின் வழி படைப்புகளில் தனித்தன்மையை வழங்குகிறார். அவருடைய கற்பனைத் திறனுக்கு அளவுகோல் என்பதே இல்லை.

  • கணினி சொல்லும் வார்த்தை ஜாலம் எல்லாம் எழுத்தாளருக்கு முன் ஒரு கைக்குழந்தைபோல்தான் தோன்றுகிறது. மடை திறந்த வெள்ளத்துக்கும் குழாயில் வரும் நீருக்குமான வித்தியாசமாக இதை உணர முடிகிறது.

பாரதியார் சிலை

ஏ.ஐ. பாரதியார்' சொன்னதுபோல ஏ.ஐ. வசதியை சரியான முறையில் பயன்படுத்தினால் மனிதனை அறிவிலும் சிந்தனையிலும் இன்னும் உயர்ந்த நிலைக்கு அது அழைத்துச் செல்லும். ஆனாலும், இறுதியில் உணர்வும், அனுபவமும், மதிப்பீடும் மனிதனிடமே நிலைத்து நிற்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.