பாறப்புறத் ராதாகிருஷ்ணன்
கடந்த 2025-ஆம் ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 79.2 லட்சம்; இது முந்தைய 2024-ஆம் ஆண்டைவிட 16.2 லட்சம், அதாவது 17% குறைவாகும்.
கடந்த 2024-இல் பிறப்பு விகிதம் சற்றே அதிகரித்தது. முன்னதாக, 2023 வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பிறப்பு விகிதம் சரிந்துகொண்டே வந்தது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தது. வரும் ஆண்டுகளில் இது குறையும்.
காரணம், நாட்டில் தொழிலாளர்கள் எண்ணிக்கை இறுகி, பொருள்கள் உற்பத்திச் சங்கிலி பாதிப்படையும். குறைந்து வரும் மக்கள்தொகையுடன், சீனாவில் அதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கையும் இணைந்து சீனாவுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.
சீனாவில் தற்போது அறுபது வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 32.3 கோடியாக உள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதத்தை எட்டியுள்ளது.
2035-ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு முதியவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் வேலை செய்யும் வயதுடைய மக்கள்தொகை குறைந்து வருவது, அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் சிக்கலாக்கும்.
எதிர்காலத்தில் பணியாளர்கள் குறைவு, உற்பத்தி குறைவு, ஓய்வூதியச் செலவு அதிகரிப்பு ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.
சீனாவின் பெருந்துயரம் மற்ற நாடுகளுக்கு ஒரு பாடத்தை அளித்திருக்கிறது.
சீனா சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளில், மக்கள்தொகை வீழ்ச்சியையும் பெய்ஜிங் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.