நாடாளுமன்றத்தில் இன்று..!

நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று தொடங்குவதற்கு முன்னதாக கூட்டணி கட்சி எம்.பி.க்களுடன் ராகுல், கார்கே ஆலோசனை மேற்கொண்டனர்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக பிரதமர் மோடிக்கு எதிரான வாசங்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.

முக்கிய நடவடிக்கையாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நீக்கக் கோரி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மக்களவை செயலரிடம் வழங்கியுள்ளனர்.

இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸில் கையெழுத்திடவில்லை.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக வழங்கிய நோட்டீஸில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை.

அவைத் தலைவரை நீக்கக் கோரும் நோட்டீஸில் எதிர்க்கட்சித் தலைவர் கையெழுத்திடுவது நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி சரியானது அல்ல என்று காங்கிரஸ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்வதாகவும் மக்களின் பொதுவான பிரச்னைகளை அவையில் எழுப்ப அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீர்மான நோட்டீஸில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...