இணையதளச் செய்திப் பிரிவு
காசிக்குச் சமமானதாகக் கருதப்படும் ஆறு தலங்களுள் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெண்காடும் ஒன்றாகும்.
சகல கலைகளையும், உயர்ந்த கல்வியையும், விவேகத்தையும் அளிப்பதால் 'வித்யாகாரகன்" என ஜோதிடக் கலை, புதனைப் போற்றுகிறது.
தில்லையில் ஆடுவதற்கு முன் ஆடல்வல்லான் திருவெண்காட்டில் ஆடியதால் இதனை "ஆதி சிதம்பரம்" என்றழைப்பர்.
51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், நவக்கிரக தலங்களில் புதன் தலமாகவும் இது விளங்குகிறது.
வாக்குவன்மை, பேச்சினால் பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, பொறுமை, கணிதம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப் புலமை ஆகியவற்றைத் தந்தருளுபவர் புத பகவான்.
ஜாதகத்தில் புதன் பலவீனம், தோஷம் இருந்தால் அவர்களுக்குக் கல்வியில் தடங்கல்கள் ஏற்படும். அத்தகைய ஜாதகர்கள், புதன் பரிகாரத் திருத்தலமாகிய திருவெண்காடு சென்று புதன் வழிபட்ட ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரரையும், ஸ்ரீ பிரம்ம வித்தியாம்பிகையையும் தரிசித்து, புதனை வழிபட்டால் புதன் தோஷம் நிவர்த்தியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.