திருநள்ளாறில் எப்போது சனிப்பெயர்ச்சி?

இணையதளச் செய்திப் பிரிவு

காரைக்கால், திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனிச் சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார்.

தர்பாரண்யேஸ்வரர் கோயில் ஏழுநிலை ராஜகோபுரம்.

சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வலம் வருவார். சிலவேளையில் ஒரு ராசியில் 3 ஆண்களும், இன்னொரு ராசியில் 2 ஆண்டுகளும் இருப்பார். மொத்தம் 12 ராசிகளையும் வலம்வர 30 ஆண்டுகள் எடுக்கும்.

அலங்காரத்தில் காட்சியளிக்கும் சனி பகவான்

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில், நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சனீஸ்வர பகவானைத் தரிசனம் செய்வது வழக்கம்.

காக வாகனத்தில் அருள்பாலிக்கும் சனி பகவான்

சனிப்பெயர்ச்சி விழா 2025 மார்ச் மாதம் நடப்பதாக பல்வேறு கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவில்லை.

சனி பகவான்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படியே சனிப்பெயர்ச்சி உள்ளிட்ட அனைத்து உற்சவங்கள், பூஜை முறைகள் நடைபெறுகிறது.

திருநள்ளாறு சனி பகவான்

அதன்படி, 2026 மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. தமிழ் மாதப்படி (மாசி 22 ஆம் தேதி) அன்றைய தினம் காலை 8.24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்க உள்ளார்.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சன்னதியில் வழிபட வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்.

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

சாதுபடி மாலை அலங்காரத்தில் சனி பகவான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்