இணையதளச் செய்திப் பிரிவு
உடல் எடையைக் குறைக்க பெரும்பாலாக அனைவரது டயட்டிலும் 'கிரீன் டீ' முக்கிய இடம் பெறுகிறது.
கிரீன் டீ ஒரு ஆரோக்கியமான பானம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் கிரீன் டீ அருந்தலாம் என்றே நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நீங்கள் வழக்கமாக அருந்தும் டீ / காஃபிக்குப் பதிலாக ஒரு 2 வாரங்களுக்கு கிரீன் டீ அருந்தி வந்தால் உடலில் நல்ல மாற்றத்தைக் காணலாம் என்கிறார்கள்.
பால் டீயைத் தவிர்த்து சர்க்கரை இன்றி கிரீன் டீ சாப்பிடுவது உடலில் கொழுப்பைக் குறைக்கும், கல்லீரல், கணையம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
இதய ஆரோக்கியத்திற்கு கிரீன் டீ உதவும். ரத்த அழுத்தம் குறைவது, கொழுப்பு குறைவது, நினைவாற்றல் அதிகரிப்பு, டிமென்ஷியா ஏற்படும் அபாயம் குறைவு, தூக்கம் மேம்படுதல், மனத்தெளிவு என கிரீன் டீ-யில் நன்மைகள் உள்ளன.
கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் இதய ஆரோக்கியம், எடைக் குறைப்பு, அறிவாற்றல் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் கிரீன் டீ அதிகமாக உட்கொள்ளும்போது தலைவலி, தூக்கமின்மை, வயிற்றில் அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை. தினமும் அளவாக 2 கப் எடுத்துக்கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.