தினமணி செய்திச் சேவை
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணிநேர விபத்துகளில் பல பதிவு செய்யப்படுவதே இல்லை.
பல்வேறு பணிகளுக்கு நிரந்தரமாக ஆட்களைப் பணியமர்த்துவது என்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதிச் சுமையாகக் கருதப்படுவதால் ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வது என்பது கொள்கை முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.
ஒப்பந்தப் புள்ளி கோரும்போது தாமே வெற்றி பெற வேண்டும் என்கிற ஆர்வத்தில் மிகக் குறைந்த லாபம் மட்டுமே பார்க்கும் பெருந்தன்மையைக் காட்டியபடி குறைந்த தொகையை ஏல முன்மொழிவாகக் குறிப்பிட்டுக் காட்டி ஒப்பந்தத்தை பெற்று விடும் முதலாளிகளில் சிலர் அதன்பிறகு அப்படிப் பெருந்தன்மையாக இருப்பதில்லை.
அலுத்துப் போய், வேலையில்லாமல் இருப்பதைவிட ஏதோ கிடைக்கிறதே என்கிற சமரசம் தொழிலாளர்களின் மனதில் ஏற்பட்டு விட்டதால், இப்போதெல்லாம் இது குறித்த புகார்கள் எழுவது குறைந்து விட்டது.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணிநேர விபத்துகளில் பல பதிவு செய்யப்படுவதே இல்லை. தொழிலாளர்களின் பணியிடப் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டால் ஒப்பந்தம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுவதுடன், அந்த ஒப்பந்ததாரர் செலுத்தி இருக்கும் வைப்புத் தொகை முழுவதும் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர் அடுத்த சில ஆண்டுகளுக்கு எந்த நிறுவனத்திலும் ஒப்பந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்யப்படும் வகையில் ஒப்பந்த நிபந்தனைகள் கடுமையாக்கப் படவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.