ஈசனுடன் ஓர் இரவு: மகா சிவராத்திரியின் மகிமைகள்!

இணையதளச் செய்திப் பிரிவு

சிவராத்திரியில் யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாத சிவராத்திரி, ஆண்டுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி என ஐந்து வகைகள் உள்ளன.

கேதார கௌரி விரதத்தின் மகிமை..!

பொதுவாக, பண்டிகைகள் பகற்பொழுதில் கொண்டாடப்படுகின்றன. ஆனால், மகா சிவராத்திரியை இரவு முழுவதும் கண்விழித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.

மகா சிவராத்திரியின் முந்தைய நாளிலே ஒருபொழுது உண்டு, அன்று முழுவதும் விரதம் மேற்கொண்டு, இரவு முழுவதும் நான்கு வேளைகளில் சிவனை அர்ச்சித்து, ஒவ்வொரு முறையும் நிவேதனம் செய்து, ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தை ஓதியவாறு வழிபட வேண்டும்.

விரதத்தை மேற்கொள்வதால் (உணவைத் தவிர்ப்பதால்) உடலிலுள்ள உள்ளுறுப்புகள் ஓய்வு கொள்கின்றன. உடலின் செயற்பாடுகள் குறைவதால் மனதில் எண்ண ஓட்டமானது அடங்கி, மனம் ஒருமுகப்பட்டு தியானம் செய்யும் பக்குவத்தைப் பெறுகிறது. தேங்கியுள்ள கழிவுப் பொருள்கள் இயல்பாகவே வெளியேறுகின்றன. மனமானது உறுதி எய்தி மிகுந்த ஆற்றலைப் பெறுகிறது. அந்நிலையில் புற்றுநோய் செல்களும் பெருகாது என்கிறார்கள்.

மகா சிவராத்திரி நன்னாளில்தான் அர்ஜுனன் தவமிருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெற்றதாகவும், கண்ணப்பர் தம் கண்களை சிவனுக்கு அர்ப்பித்ததாகவும், பகீரதன் தனது ஆற்றலால் கங்கையைப் பூமிக்கு வரவழைத்ததாகவும், பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால நஞ்சை சிவபிரான் உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு பருகியதாகவும் புராணங்கள் விவரிக்கின்றன.

ஐம்புலன்களையும் ஒடுக்கி, உறங்கச் செய்து, அப்போது எழும் உண்மையான விழிப்புணர்வு நிலையில் இறைப் பேரருளை, மெய்ஞானத்தை, சிவானுபவத்தை இடையறாது துய்த்தலே மகா சிவராத்திரியின் தத்துவமாகும்.

உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானப் பயிற்சி, முத்திரைப் பயிற்சிகளை குரு மூலமாக முறையாக கற்றுக் கொண்டால், எத்தகைய பாகுபாடுமின்றி இந்நிலையை ஒவ்வொரு மனிதனாலும் எய்த இயலும். சிவனைக் குறித்த ஞானத்தைப் பெறத்தக்க இரவாகவும் மகா சிவராத்திரி திகழ்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்