இணையதளச் செய்திப் பிரிவு
வருமானம் படிப்படியாக உயரும். சிலர் வசிக்கும் வீட்டை புதுப்பிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் எதிர்ப்பு தோன்றினாலும் கெüரவத்துக்கு பங்கம் வராது. கலைத்துறையினர் உற்சாகமான மனநிலையுடன் பணியாற்றுவீர்கள்.
பெண்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிறையக் காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
வெகு நாளைய கனவு ஒன்று பலிக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வினைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் தங்கள் செயல்களை வெளிப்படையாகச் செய்ய வேண்டாம். கலைத்துறையினர் கையில் இருக்கும் ஒப்பந்தங்களை நன்கு முடித்து விடுவீர்கள்.
பெண்கள் குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் ஏற்பாடாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - பிப்ரவரி 13, 14.
குடும்பத்தில் மழலை பாக்கியம் உண்டாகும். வருமானம் சீராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிராகச் சதி செய்தவர்கள் அடங்கி விடுவார்கள்.
அரசியல்வாதிகள் எவரிடமும் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும்.
பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வந்து நீங்கும். மாணவர்கள் விருப்பப் பாடங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - பிப்ரவரி 15, 16.
தொழிலில் சீரான நிலையைக் காண்பீர்கள். முக்கிய விஷயங்களைப் பேசும் போது எச்சரிக்கையுடன் இருப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டது போல் முடிப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்கும் செலவு செய்வீர்கள்.
பெண்களுக்கு உடலும் மனமும் பலப்படும். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். வாராக் கடன்களும் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் முக்கிய அதிகாரிகள் கருணை காட்டுவார்கள்.
அரசியல்வாதிகள் மக்களுக்கு உதவும் பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
பெண்கள் கணவர் குடும்பத்தினரிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் போட்டிகள் இருக்காது. பங்கு வர்த்தகத்தின் மூலம் வருமானம் வந்து கொண்டிருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும்பொழுது கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் துறையில் முன்னேறுவதற்கு சீரிய முயற்சிகளை எடுப்பீர்கள்.
பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பணப்புழக்கம் அதிகரிக்கும். அதே நேரம் எவருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதிய உயர்வு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் வீணான யோசனைகளைத் தவிர்க்கவும்.
கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரிடம் அன்புடன் நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் புதிய ரகசியங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பணவரவு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு அனாவசியமாக அறிவுரை வழங்க வேண்டாம்.
கலைத்துறையினர் சில ஆடம்பரச் செலவை செய்து மகிழ்வீர்கள். பெண்கள் பொருளாதார மேன்மையைக் காண்பீர்கள்.
மாணவர்கள் ஞாபக சக்தி வளர விடியற்காலையில் கல்விக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் லாபத்தைப் பெருக்குவீர்கள். குடும்பத்தில் தடைபட்டிருந்த சுப காரியங்கள் ஏற்பாடாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் வருமானம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைத் தேடிப் பெறுவீர்கள்.
பெண்களுக்குக் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பயணங்களாலும் நன்மை அடைவீர்கள். வேகத்துடன் விவேகமும் கூடும்.
உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் தைரியத்துடன் சிறிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள்.
அரசியல்வாதிகள் கொடுத்த பொறுப்புகளை மிகக் கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு கூடும். பெண்களுக்கு உற்றார் உறவினர் நட்புக் கரம் நீட்டுவர்.
மாணவர்கள் நண்பர்களுடன் காலை நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தொழிலில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.
அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் அனுகூலமாக நடந்து கொள்ளும். கலைத்துறையினருக்கு புகழும் அங்கீகாரமும் கிடைக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு உண்டாகும். மாணவர்கள் தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து ஒதுங்கி இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
கடமையை கண்ணாகக் கருதுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை, செயல்திறன் கூடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவு இரட்டிப்பாகவே இருக்கும்.
அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.