அஜீரணக் கோளாறா? என்ன செய்ய வேண்டும்?

இணையதளச் செய்திப் பிரிவு

உணவுப் பழக்கவழக்கத்தாலும் உடல் இயக்கம் இல்லாத காரணத்தாலும் இன்று பலருக்கும் செரிமானக் கோளாறுகள் இருக்கின்றன. 

வயிற்றின் மேல் பகுதியில் லேசான வலி அல்லது எரிச்சல் போன்ற உணர்வுதான் டிஸ்பெப்சியா அல்லது அஜீரணம் எனும் செரிமானக் கோளாறு. 

வயிற்றில் எரிச்சல் அல்லது வலி இருக்கும், சாப்பிடும்போது சீக்கிரம் வயிறு நிரம்பிய உணர்வு, சாப்பிட்ட பிறகு வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு, வயிறு வீக்கம், அதிகப்படியான வாயு, குமட்டல், நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இது பெரும்பாலும் நேரம் தவறி சாப்பிடுவது, குறிப்பாக நள்ளிரவில் சாப்பிடுவது, மன அழுத்தம், தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையது. நவீன வாழ்க்கை முறை இதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. 

இதனை சரிசெய்ய சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும், இரவு உணவு எளிதில் ஜீரணம் ஆகக்கூடியதாக இருக்க வேண்டும், இரவு உணவை தாமதமாக சாப்பிடக்கூடாது.

எண்ணெய் மற்றும் காரம் நிறைந்த உணவுகளைக் குறைக்க வேண்டும், ஃபாஸ்ட் ஃபுட்(துரித உணவுகள்), ஜங்க் ஃபுட்(பொருந்தா உணவுகள்) தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிப்பது, போதுமான தூக்கம் அவசியம்.

அஜீரணம் தொடர்ந்து இருப்பது அல்லது அஜீரணத்திற்கு மருத்துவரின் அறிவுறுத்தலின்றி மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவது சரியானது அல்ல. முதல்முறையாக அஜீரணம் ஏற்படும்பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...