தினமணி செய்திச் சேவை
டிரம்ப் என்ன செய்தார்? இந்தியப் பொருள்கள் "கோவணத்திலிருந்து, கணிணி "சிப்' வரை எதுவாக இருந்தாலும் இருபத்தைந்து விழுக்காடு வரி;'
ருசியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காகக் கூடுதலாக இருபத்தைந்து விழுக்காடு வரி; ஆக ஒரு ரூபாய் பொருளுக்கு அரை ரூபாய் வரி என்று ஆக்கிவிட்டார்!
இந்திய அரசியல் நடவடிக்கைகளிலே மிகப் பெரிய தாக்கத்தை நிகழ்காலத்திலும், அடுத்துவரும் காலத்திலும் ஏற்படுத்தத்தக்கது மோடி-டிரம்ப் ஒப்பந்தம்!
இந்த ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மிகவும் பதறிவிட்டார். நாடாளுமன்றம் அமளிக் காடானது!
நல்ல எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி என்ன சொல்லியிருக்க வேண்டும்?
அமெரிக்காவோ டிரம்ப்போ நமக்கு முக்கியமில்லை; அதனுடைய சந்தைதான் முக்கியம்;
ஆனால் பாரத மாதாவை விற்றுவிட்டார் மோடி என்று சொல்லி நம்மை அதிர வைத்துவிட்டார்!
டிரம்ப்போடு இணக்கப்படுத்திக் கொண்டுவிட்டார் மோடி என்றவுடன், இந்தியாவின் பங்குச் சந்தை வேட்டியைத் தலையில் கட்டிக் கொண்டு மகிழ்ச்சிக் கூத்தாடியது!
சந்தையின் பிரதிபலிப்புதான் முக்கியம்! ராகுலின் பிரதிபலிப்பு அல்ல!
ஐம்பது விழுக்காடு வரி பதினெட்டு விழுக்காடு வரியாகிவிட்டது! முன்பை விடப் பல மடங்கு குறைவு.
டிரம்ப் பெரிய அண்ணன்தான்! இது புதிதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.