இருந்தமிழே உன்னால் இருந்தேன்...

ராஜ்கண்ணன்

தமிழ்மொழி தோற்றம் அறியப்படாத தொன்மை வாய்ந்தது. அது கருதியே கம்பர் "என்றுமுள தென்றமிழ்' என்றார்; சேக்கிழாரும் "மன்னு தீந்தமிழ்' என்று பகன்றார்.

தொல்காப்பியத்தைத் தொடர்ந்து நன்னூல், புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நேமிநாதம், தண்டியலங்காரம், இலக்கண விளக்கம், முத்துவீரியம் போன்ற இலக்கண நூல்களும், திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி போன்ற நிகண்டுகளும் தோன்றின.

தமிழ் மக்களின் வாழ்வு இயற்கையோடு இயைபுடையதாக இருந்தமையால், மக்கள் ஒழுக்கத்தைக் கூறும் விதமாக இயற்கைக் காட்சிகளைச் செய்யுளாக அழகுற வடித்தனர் சங்கப் புலவோர்.

இறையடியார்கள் மட்டுமல்லாது இறைவர்களேகூட தமிழ்ப் பற்றாளர்களாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. சைவர்களின் தெய்வமான சிவபெருமான் தனது தோழனான சுந்தரரிடம், "சொற்றமிழால் எம்மைப் பாடுக' என்று ஆணையிடுகிறார்.

செய்யுளைத் தொடர்ந்தே உரைநடை உருவானதால் தொடக்க காலத்தில் உரைகள் செய்யுளை ஒட்டிய ஒரு நடையிலேயே அமைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுமையான கட்டுரைக்கு...