இணையதளச் செய்திப் பிரிவு
வருமானம் படிப்படியாக உயரும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள்.
அரசியல்வாதிகளின் கடந்த கால உழைப்புக்கு இப்பொழுது பலன் கிடைக்கும். கலைத்துறையினர் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெண்கள் கணவர் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் அதிகமாக உழைத்து மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
விவசாயிகளுக்கு சிறிய தடைக்குப் பிறகு புதிய குத்தகைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் கட்சி பிரசாரங்களுக்கு நேரம் ஒதுக்கிவீர்கள்.
கலைத்துறையினருக்கு பண வரவு சீராக இருக்கும். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உங்கள் பிரச்னைகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த கடன்களும் வசூலாகும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரியிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டுவீர்கள்.
அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவுடன் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.
பெண்கள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்வீர்கள். குடும்பத்திலும் உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் தொல்லை ஏற்படாது. வியாபாரிகள் தடைகளைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் பொறுப்புடன் செயலாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகும். பெண்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நிச்சயமாகும். தொழிலில் வளர்ச்சியடைய புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு அலைச்சல்கள் கூடினாலும் காரியங்கள் சிறப்பாக முடிவடையும். கலைத்துறையினர் கடினமாக உழைத்து நல்லபடியாக முன்னேறுவீர்கள். பெண்கள் ஆடை அணி
கலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் தீயவர்களின் நட்பை விலக்கிவிடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - பிப்ரவரி 20, 21.
குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். ஆரோக்கியமும் மன வளமும் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மனதை அரித்து வந்த பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளில் பொருள்களை விற்பீர்கள்.
அரசியல்வாதிகள் எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அறிந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் எதிர்பாராத புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்கள் விளையாடும்போது கவனமாக இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - பிப்ரவரி 22, 23.
தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். குடும்ப முன்னேற்றத்துக்கான சம்பவங்கள் நடக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை விற்று நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் கவனமாக பொதுச் சேவையில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 24, 25.
அன்னை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் எதிலும் கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
பெண்கள் கணவரிடம் எதிர்பார்த்த அன்பையும் பாசத்தையும் பெறுவீர்கள். மாணவர்கள் நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் } பிப்ரவரி 26.
நேர்வழியில் சிந்தித்துக் காரியமாற்றுவீர்கள். உங்கள் சுய முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உற்றார் உறவினர் உங்கள் இல்லம் தேடிவருவர்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சியில் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினர் வருமானம் உயரக் காண்பீர்கள்.
பெண்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்துவீர்கள். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
குடும்பத்தில் அமைதி நிலவும். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் சக கலைஞர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.
பெண்கள் பொருளாதார வளத்தால் திருப்தி அடைவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பொருளாதாரம் சீராக இருக்கும். சிலர் நிலம், வீடு வாங்குவீர்கள். தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் ஏற்பட்ட மந்த நிலை நீங்கும்.
அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும்.
பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவர்கள் கல்வியில் சீரிய அக்கறை காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிறிய போட்டி பொறாமைகளைச் சந்திப்பீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் கூட்டாளிகளை கலந்தாலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளை இனம் கண்டுகொள்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.
பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடமையை கண்ணாகக் கருதுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை, செயல்திறன் கூடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவு இரட்டிப்பாகவே இருக்கும்.
அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.