இணையதளச் செய்திப் பிரிவு
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதேபோல வரும் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும்.
மீன்பிடித் தடை காலங்களில் மீனவர்களுக்கு தற்போது ரூ. 8,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.
கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும்.
விசைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும்.
நகரப் பகுதிகளில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.