பாறப்புறத் ராதாகிருஷ்ணன்
தினசரி மின்னணு ஊடகங்கள் மூலம் திரையைப் பார்க்கும் நேரம் 7.5 மணி நேரமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் புத்தகங்கள், செய்தித்தாள்களைப் படிக்கும் நேரம் 25 நிமிஷங்களாகக் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
புத்தக வாசிப்பு என்பது உலக நடப்பை அறியவும், மொழித் திறனை மேம்படுத்தவும், சமூகங்களிடையே நல்லுறவை வளர்க்கவும், மனிதர்களைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு முக்கியமான கருவியாகவும் விளங்குகிறது.
சமூகத்தின் கருத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் செய்தித்தாள்கள் விளங்குகின்றன. சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள ஒரு பொறுப்புமிக்க அமைப்பாகவும் பத்திரிகைகள், புத்தகங்கள் திகழ்கின்றன.
ஜனநாயகத்தின் சரியான செயல்பாட்டிற்கு பத்திரிகை சுதந்திரம் இன்றியமையாதது. எனினும், "பத்திரிகைச் சுதந்திரம் முழுமையான, வரம்பற்றது மற்றும் எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் கட்டுப்பாடற்றது அல்ல.
செய்தித் தாள்கள், புத்தகங்கள் வாசிப்பு மக்களிடையே குறைந்தாலோ அல்லது கைவிட்டாலோ அதனால் சமூகத்தில் பெரும் விளைவுகள் ஏற்படும் என தனது "ரீடிங் மேட்டர்ஸ்' என்னும் புத்தகத்தில் எச்சரித்துள்ளார் ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகக் கல்லூரியின் பேராசிரியர் ஜோயல் ஹால்டார்ஃப்
செய்தித்தாள்களையும், புத்தகங்களையும் நாளும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவர்களாக வாழ்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.