இணையதளச் செய்திப் பிரிவு
என்சிஇஆர்டி 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்துக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று (பிப். 26) உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பிரிவில் ஆட்சேபத்துக்குரிய சில கருத்துகள் இடம்பெற்றன.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் வழக்காக எடுத்து இன்று விசாரணை மேற்கொண்டது.
பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
நீதித்துறைக்கு எதிரான ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் தீட்டப்பட்ட சதி என்றும் திட்டமிட்டே இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு.
தொடர்ந்து இந்த என்சிஇஆர்டி சமூக அறிவியல் புத்தகத்தை பதிப்பதற்கோ வெளியிடுவதற்கோ தடை விதித்ததுடன், இப்புத்தகத்திலுள்ள ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை பொதுவெளியில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் உரிய விளக்கமளிக்க என்சிஇஆர்டி இயக்குநருக்கும் பள்ளிக்கல்வித் துறை செயலருக்கும் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் என்சிஇஆர்டி மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.