பெயர்களிலும் வளரட்டும் வரலாறு!

அண்மையில், இலக்கிய நிகழ்வு ஒன்றின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றபோது, அந்த விழாவின் பொருட்டு நடத்தப்பெற்ற இலக்கியப் போட்டிகளில் பங்கேற்றோருக்கும், வென்றோருக்கும் பரிசளிக்க நேர்ந்தது.

அண்மையில், இலக்கிய நிகழ்வு ஒன்றின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றபோது, அந்த விழாவின் பொருட்டு நடத்தப்பெற்ற இலக்கியப் போட்டிகளில் பங்கேற்றோருக்கும், வென்றோருக்கும் பரிசளிக்க நேர்ந்தது. அதில் வினோதமான பரிசளிப்பு ஒன்றும் நடைபெற்றது.

பொதுவாக, அவரவர்தம் குலதெய்வப் பெயர்கள், குடும்பப் பெயர்கள், சிறப்பு வேண்டுதலால் பிறந்த குழந்தைகளுக்கு விருப்ப தெய்வங்களின் பெயர்கள் மற்றும் அத்தெய்வங்கள் உறைகின்ற திருத்தலங்களின் பெயர்கள் சூட்டப் பெறுகின்றன. சிறப்பான நிலையில், உதவிய அன்பர்களின் பெயர்கள்கூடச் சூட்டுகிற நிலை இருந்தது.

முழுப் பெயரையும் சொல்வது தவிர்த்து, தந்தை பெயரின் முன் எழுத்தும் தன் பெயரின் முன் எழுத்தும் கொண்டு அறியப்பெற்ற பெயர்களும் உண்டு.

வ.உ.சிதம்பரம்- வ.உ.சி., சா.கணேசன்- சா.க., இராய.சொக்கலிங்கன்- இராய.சொ., வ.சுப.மாணிக்கம்- வ.சுப.மா., சா.விஸ்வநாதன்- சாவி., ம.பொ.சிவஞானம்- ம.பொ.சி., மு.வரதராசன்- மு.வ., தி.க.சிவசங்கரன்- தி.க.சி. ஆகிய பெயர் வரிசையில், ஊர்ப் பெயரின் முதல் எழுத்தும் சேர்த்து அழைக்கப்பெறும் மரபும் நம்மிடையே உண்டு.

நியூமராலஜி என்னும் எண் ஜோதிடம் புழக்கத்தில் வந்த பிறகு, பற்பலப் புதுப் பெயர்கள் தமிழ்க் குழந்தைகளுக்கு இடப்பெறுகின்றன. குறிப்பிட்ட எழுத்துகளில் பெயர் அமைய வேண்டும் என்பதற்காக, தமிழில் மொழிமுதல் வாரா எழுத்துகள், மொழிக் கடை வாரா எழுத்துகள் பலவற்றைக் கைக்கொண்டு, பொருளறிந்தோ, அறியாமலோ, வாய்க்கு வழங்க சிரமமான மரபற்ற பெயர்களைச் சூட்டுவது அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...