இணையதளச் செய்திப் பிரிவு
அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் முடியும். பங்கு வர்த்தகத்தில் இருந்தும் சிறு ஆதாயம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிறிது பளு கூடும். வியாபாரிகளுக்கு நேர்முக, மறைமுக தொல்லை எதுவும் இராது. விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான நேரத்தில் பயன்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் தக்க ஒத்துழைப்பை நல்குவார்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் அன்புத் தொல்லைக்கு ஆள்படுவீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரிகள் நண்பர்களுடன் சேர்ந்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் இடையூறுகள் எதுவும் ஏற்படாது செயலாற்றுவீர்கள். கலைத்துறையினர் புதிய பயணங்களால் சில வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.
பெண்கள் ஆன்மிகத்திலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை .
தொழிலை திறம்பட நடத்துவீர்கள். உடல், மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் உயர்வைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் மனதுக்கினிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.
பெண்கள் குடும்பத்தில் நிறைவான போக்கைக் காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறக் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
செல்வாக்கு அதிகரிக்கும். உற்றார் உறவினர், நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். வியாபாரிகள் கனிவாகப் பேசி வியாபாரம் செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் பணிகளைத் திட்டமிட்டு வகுத்துக்கொண்டு செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள்.
பெண்கள் ஆலயங்களுக்குச் சென்றுவருவீர்கள். மாணவர்கள் எதிர்காலத்துக்காகப் பயனுள்ள திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
குடும்பத்தில் சந்தோஷம் கரைபுரளும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கூடும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களில் தேவையற்றவர்களிடமிருந்து விலகிவிடுவீர்கள். வியாபாரிகள் தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் சுமுகமான உறவை வைத்துக்கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு பணவரவுக்குக் குறைவு வராது. பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் தோன்றி மறையும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
குழப்பங்களும் சஞ்சலங்களும் தீர்ந்துவிடும். வங்கிகளிடமிருந்தும் கடன்பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் போனஸ் கிடைக்கும். வியாபாரிகளின் முயற்சிகளை கூட்டாளிகள் பாராட்டுவீர்கள்.
அரசியல்வாதிகள் உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினருக்கு சமூகத்தில் வரவேற்புகள் அதிகரிக்கும். பெண்களுக்கு உடன்பிறந்தோரில் மூத்தோரால் நன்மைகள் கிடைக்கும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
வருமானம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு பழைய வீடு விற்பனை ஆகும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடமை தவறாமல் உழைப்பீர்கள். வியாபாரிகளிடம் கூட்டாளிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.
அரசியல்வாதிகள் தேவையில்லாத அறிவுரைகளை எவருக்கும் வழங்கவேண்டாம். கலைத்துறையினர் புதிய படைப்புகளைப் படைப்பீர்கள்.
பெண்கள் வருமானம் தரும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். மாணவர்கள் பெற்றோரின் உதவிகளைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மனதுக்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் சுமுகமான உறவு தொடரும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு நேரடியாகப் பிரச்னை செய்தவர்கள் அடங்கிவிடுவார்கள். கலைத்துறையினரின் முகத்தில் மலர்ச்சியும் பொலிவும் காணப்படும்.
பெண்கள் ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வி உயர்வுக்காகச் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 2, 3.
தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் நண்பர்களும் உதவி செய்வார்கள்.
உத்தியோகஸ்தர்கள் சிரமமில்லாமல் அனைத்துப் பணிகளையும் முடித்துவிடுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினர் கடினமாக முயற்சி செய்து, சில சாதனைகளைச் செய்வீர்கள்.
பெண்களுக்கு மனதுக்கினிய செய்திகள் வந்துசேரும். மாணவர்களில் சிலர் கல்வி கற்பதற்காக இடமாற்றத்தைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 4, 5, 6.
உங்கள் தேவைகள் சுலபமாக பூர்த்தியாகும். உடல்நலனிலும் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் புரிதல் உண்டாகும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளைத் திறம்படச் செய்வீர்கள். கலைத்துறையினர் வாய்ப்புகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். பெண்கள் ஆலயத் திருப்பணிகளிலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு அவர்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 7, 8.
தொழிலில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. கடினமாக உழைக்க நேரிடும்.
உத்தியோகஸ்தர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். வியாபாரிகளின் முயற்சிகள் படிப்படியாக வெற்றியைக் கொடுக்கும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களையும் அரவணைத்துச்செல்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவுடன் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.
பெண்களுக்கு புதிய வருவாய் வரும் வாய்ப்புகள் தேடிவரும். மாணவர்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்துக்குள் சுமுகமான பாகப்பிரிவினை நடக்கும்.
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் வெற்றி பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் காலத்துக்கேற்றவாறு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றிபெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.