இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்மார்ட்ஃபோன், டிவி மூலமாக குழந்தைகளின் திரை நேரம் (screen time) அதிகரித்து வருவது அவர்களுக்கு அறிவாற்றல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
இப்போது குழந்தைகளுக்கு கதைகள், பாடல்கள், தகவல்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே காட்டப்படுகின்றன, கற்பிக்கப்படுகின்றன.
வீட்டில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது, வீட்டிற்குள்ளேயே இருக்கும் நகர வாழ்க்கை முறை, குழந்தைகளைக் கவனிக்க பெரியவர்கள் இல்லாதது என இதற்கான காரணங்கள் பல...
தினமும் 3 முதல் 4 மணி நேரம் திரைகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு அறிவாற்றல் சார்ந்த சிக்கல்கள் ஏற்படுகின்றன.
மின் புத்தகங்களைப் படித்தல், வேகமான வீடியோ கேம்களை விளையாடுதல், கல்வி சார்ந்த வீடியோக்களைப் பார்த்தல் போன்ற செயல்களில் குழந்தைகளை நாம் ஈடுபடுத்தும்போது அது நினைவாற்றலை சிக்கலாக்குகிறது.
கவனம் சிதறுதல், டிவியை அணைக்கும்போதோ, ஸ்மார்ட்போனை திரும்பப் பெறும்போதோ எரிச்சல் அடைதல், கருத்துகளை வெளிப்படுத்துவதில் சிரமம், தூக்கக் கோளாறுகள், பாடங்களை நினைவில் கொள்வதில் சிரமம், சமூகத்திலிருந்து விலகி இருத்தல் போன்ற பிரச்னைகளை குழந்தைகள் எதிர்கொள்கின்றன.
திரையில் படிக்கும்போது அது அறிவாற்றல் செயல்பாடுகளைத் தூண்டினாலும் எழுத்துகள் அச்சிடப்பட்ட புத்தகங்களைப் படிக்கும்போது எதிலும் கிடைக்காத ஒரு ஆழமான ஈடுபாடு கிடைக்கிறது.
கருத்துகளை உள்வாங்கி படிக்கும்போது அவர்களால் எளிதில் அவற்றை நினைவுகூர முடியும். ஆனால், ஆன்லைனில் வேகமாக கடந்து செல்லும்போது அது மனதில் பதிவதில்லை.
எனவே, குழந்தைகளுக்கு புத்தகங்கள், மூளைக்கு வேலை கொடுக்கும் புத்தகங்கள், அறிவாற்றல் சார்ந்த விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம்.
எல்லாவற்றையும்விட குழந்தைகளைத் தினமும் ஓரிரு மணி நேரம் வெளியில் விளையாட ஊக்கப்படுத்துங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.