இணையதளச் செய்திப் பிரிவு
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி இருவரும் சந்தித்ததையடுத்து கூட்டாக அறிவித்துள்ளனர்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.
அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தற்போது கூட்டணியில் உள்ளதாகவும் மேலும் சில கட்சிகள் விரைவில் எங்கள் கூட்டணியில் சேருவார்கள் என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.
எங்கள் கூட்டணி வரும் தேர்தலில் 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும் பாமகவுக்கு தொகுதிகள் முடிவாகிவிட்டது ஆனால் பின்னர் அறிவிப்போம் என்றும் இபிஎஸ் கூறினார்.
திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அன்புமணி தெரிவித்தார்.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி என இரு தரப்பு உருவாகியுள்ள நிலையில் ராமதாஸின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.
ராமதாஸையும் கூட்டணியில் இணைக்க அதிமுக முயற்சித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.