இணையதளச் செய்திப் பிரிவு
தில்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் வீட்டில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவில் பெண் நடனக் கலைஞர்களின் பரத நாட்டிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்பித்தார். வழிபாட்டில் கலந்துகொண்டு பின்னர் சிறப்புரை ஆற்றினார்.
மத்திய அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
பிரதமர் மோடி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று கூறி தமிழில் உரையைத் தொடங்கினார்.
இதனிடையே, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக வெளியாகியுள்ள பராசக்தி படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது
தவெக தலைவர் விஜய்யின் ஜன நாயகனுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று குரல்கொடுத்தார்.
இந்த நிலையில், மறுநாளே மோடியின் நிகழ்ச்சியில் பராசக்தி படத்தின் குழு பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.