குளிர் காலம்.. ஏசி அறையில் பணி.. கண்களில் தொற்று அதிகரிக்கும் அபாயம்!

இணையதளச் செய்திப் பிரிவு

கண்களில் தொற்று பரவுதல் குளிர் காலத்தில் அதிகரிப்பதாகவும் அதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்? என்பதற்கான ஆலோசனைகளையும் கண் மருத்துவ நிபுணர்கள் வழங்கியுள்ளனர்.

மிருணாள் தாக்கூர் இன்ஸ்டா

குளிர் காலத்தில் உடலை உஷ்ணமாக நாம் வைத்துக்கொள்வதால் கண்களும் அதிக சூடாகிறதாம்.

குளிர் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதாலும் கண் சூடாவதாலும் நுண் கிருமிகளால் கண்களில் பாதிப்பும் தொற்றும் எளிதாக ஏற்படுகிறதாம்.

IANS

குளிர் காலத்தில் வெளியில் அதிக நேரம் சுற்றுவது கண் வறட்சியை ஏற்படுத்தி பாதிப்பை அதிகரிக்கிறது

குளிருக்கு இதமாக வசிப்பிடங்களில் ஹீட்டர்களை பயன்படுத்துவதும் கண் வறட்சியை ஏற்படுத்துகிறது

குளிர் காலத்தில் வெப்பநிலை குறைந்திருப்பதால் கண்களுக்குச் செல்லும் ரத்த நாளங்கள் இயல்பாகவே சுருங்குகின்றன. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

வைரல் கன்ஜங்க்டிவிடிஸ்,

அலர்ஜிக்,

ப்லேபாரிடிஸ் (கண் இமை வீக்கம்),

டாக்ரையோசிஸ்டிடிஸ் ஆகிய நோய்த் தொற்று கண்களில் ஏற்படுகிறது.

இது தவிர்த்து, அலர்ஜி, வைரஸ், பாக்டீரியா உள்பட பல புற காரணங்களாலும் குளிர் காலத்தில் கண்களில் தொற்று ஏற்படுகிறது.

இதனால்,

கண் சிவப்பு நிறமாகுதல்

கண் அரிப்பு

கண்களில் அதிகளவில் நீர் வடிதல்

கண் பார்வை மங்குதல் ஆகிய அறிகுறிகள் தென்படும்

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோயின் பாதிப்பு தீவிரமடையாமல் தவிர்க்கலாம்.

கண்களில் பாதிப்பு ஏற்பட்டால் கண்களை கசக்கக் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். அப்படிச் செய்தால் அலர்ஜியை மேலும் தீவிரமாக்குமாம்.

குளிர் காலத்தில் கண்களை அடிக்கடி கழுவி ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்

கண்களுக்குச் சொட்டு மருந்து விட்டு பாதுகாக்கலாம்

குளிர் காலத்திலும் அதிகமாக நீராகாரங்களைப் பருக வேண்டும்

தொடு திரைகள் முன் அமர்ந்து பணி செய்பவராக இருந்தால் அடிக்கடி திரையிலிருந்து பார்வையை விலக்கி வேறு பக்கம் பார்த்துகொண்டு, அதன்பின் பணியைத் தொடருவது கண்களுக்கான அழுத்தத்தை குறைக்கும்

சூரிய வெளிச்சத்திலிருந்து வரும் ஆபத்தான கதிர்களிலிருந்து கண்களை பாதுகாக்க தரமான கண் கண்ணாடிகளை அணியலாம்.

வீடுகளில் தூசி படியாமல் சுத்தமாக வைத்திருத்தல் கண்ணுக்கு தெரியாத தூசு கண்களுக்கு செல்வதை தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் செய்திகள், படங்களுக்கு...