மாய்ஸ்சரைசரை எப்படி பயன்படுத்த வேண்டும்?

இணையதளச் செய்திப் பிரிவு

சரும அழகுக்காக இன்று இளைஞர்கள், பெண்கள் பலரும் மெனக்கெடுகின்றனர். சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும், இளமையாக இருக்க வேண்டும் என்று பல்வேறு வகை க்ரீம்களைப் பயன்படுத்துகின்றனர்.

பிரபலங்கள் பலரும் சமூக ஊடகங்களில் சரும தயாரிப்புகளை பரிந்துரைக்கிறார்கள். ஆனால், அது பாதுகாப்பானது அல்ல என்றும் ஒருவருக்கு பொருத்தமாக இருக்கும் அழகு பராமரிப்புப் பொருள், மற்றவருக்கு சருமப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தவறான தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது சரும வறட்சி, எரிச்சல், முகப்பரு மற்றும் நீண்ட கால சரும பாதிப்புக்குக்கூட வழிவகுக்கும் என்றும் கூறுகிறார்கள்.

சருமத்தை நன்றாக பராமரிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தோல் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சரியான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் என்னமாதிரியான க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும், வறண்ட சருமத்திற்கான காரணம் பற்றியும் மருத்துவரை அணுகி தெரிந்துகொள்வது நல்லது.

 ஒரே மாய்ஸ்சரைசரை அனைவரும் பயன்படுத்த முடியாது, ஒருவருக்கு பொருத்தமாக அமைந்த க்ரீம் மற்றொருவருக்கு முகப்பருக்கள் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

குளித்த உடனேயே சருமத்தில் மாய்ஸ்சரைசரை  அப்ளை செய்ய வேண்டும். சருமத்தில் ஈரப்பதம் இருக்கும்போதே தடவ வேண்டும்.

மாறாக, சருமம் வறண்டு இருக்கும்போது தடவினால் அது பாதிப்புகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த தேவைப்படலாம். இது சருமம் வறண்டு போவதைத் தடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...