இணையதளச் செய்திப் பிரிவு
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் இணைந்துள்ளது.
முன்னதாக என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அந்த கூட்டணியில் இருந்து விலகினார்.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் அமமுக டிடிவி தினகரன் இன்று சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
ஊழல்மிக்க திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணியை பலப்படுத்த எங்களுடைய பங்காளிச் சண்டை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வர வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணியில் இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை, எங்களுக்குள் இருப்பது பங்காளிச் சண்டைதான், தமிழ்நாட்டின் நலனுக்கும் கட்சி நலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விட்டுக்கொடுத்து எல்லாவற்றையும் மறந்து எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு கூட்டணிக்கு முழு மனதுடன் வந்திருக்கிறோம் என்றார்.
இதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனை வரவேற்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரனும் நன்றி தெரிவித்தார்.
திமுக ஊழல் ஆட்சியை அகற்றி என்டிஏ கூட்டணி ஆட்சி தமிழத்தில் அமையும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.