சமூக நினைவுகளை நசுக்க வேண்டாம்!

தினமணி செய்திச் சேவை

சமூக ஊடகங்கள் கருத்துச் சுதந்திரத்தின் புதிய வழி என்று போற்றப்படும் இந்தக் காலத்தில், அதே ஊடகங்கள் சமூக நினைவுகளைச் சிதைக்கும் வகையில் மாறிவரும் அபாயம் உருவாகியுள்ளது. 

தவறான கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்பி வரலாற்றை மாற்ற முயலும் போக்கும், நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் தங்களை அா்ப்பணித்த தலைவா்களின் தியாகத்தை இழிவுபடுத்தும் ஊடக நடைமுறையும், சுய அரசியல் ஆதாயத்துக்காக பிறரை தரக்குறைவாக பேசும் தன்னலவாதிகளாகவும், தன்னுடைய சொந்த விளம்பரத்துக்காக சபை நாகரிகம் இல்லாமல் பேசுவதும், நடந்து கொள்வதும், வெறும் கருத்து வேறுபாடு அல்ல; அது சமூகத்தின் அறிவுசாா் அடித்தளத்தையே அழிக்கும் வன்முறை செயல்.

ஊடகங்களின் பொறுப்பை இங்கு தவிா்க்க முடியாது. பாா்வையாளா்களை அதிகரிப்பதற்காகவும், விவாதம் என்ற பெயரில் சா்ச்சையை உருவாக்குவதற்காகவும், ஆதாரமற்ற கருத்துகளுக்கு மேடை அமைப்பது ஊடக தா்மத்துக்குப் புறம்பானது. அதே நேரத்தில், சமூக ஊடகத் தளங்களும் உண்மைக்குப் புறம்பாக உணா்வைத் தூண்டும் பதிவுகளை முன்னிலைப்படுத்தும் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தவறான தகவல் வேகமாகப் பரவுவது ஒரு தொழில்நுட்ப விபத்து அல்ல; அது கட்டுப்பாடற்ற ஊடக நெறிமுறையின் விளைவு.

வரலாற்றை விமா்சிக்கக் கூடாது என்பதல்ல; விமா்சனமும் விவாதமும் வேண்டும்; மறுபரிசீலனையும் வேண்டும். ஆனால், அவை அனைத்தும் ஆதாரபூா்வமாகவும், அறிவியல் பூா்வமாக முழுமையான பாா்வையுடனும், மரியாதையுடனும் இருக்க வேண்டும். தியாகத்தை அவமதிப்பதும், உண்மையைத் திரிப்பதும், அடுத்தவரை அசிங்கப்படுத்துவதும், சமூகத்தைப் பிளக்கும் விதத்தில் வரலாற்றைப் பயன்படுத்துவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

வரலாற்றை விமா்சிக்கக் கூடாது என்பதல்ல; விமா்சனமும் விவாதமும் வேண்டும்; மறுபரிசீலனையும் வேண்டும். ஆனால், அவை அனைத்தும் ஆதாரபூா்வமாகவும், அறிவியல் பூா்வமாக முழுமையான பாா்வையுடனும், மரியாதையுடனும் இருக்க வேண்டும். தியாகத்தை அவமதிப்பதும், உண்மையைத் திரிப்பதும், அடுத்தவரை அசிங்கப்படுத்துவதும், சமூகத்தைப் பிளக்கும் விதத்தில் வரலாற்றைப் பயன்படுத்துவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.சமூக ஊடகங்கள் ஒரு சக்திவாய்ந்த கருவி. அது உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் பயன்படலாம்; அதே நேரத்தில் சமூக நினைவுகளை நசுக்கவும் பயன்படலாம். எந்தப் பாதையை நாம் தோ்வு செய்கிறோம் என்பதே முக்கியம். நல்ல தலைவா்களின் தியாகத்தை மரியாதையுடன் நினைவுகூரும் பண்பும், வரலாற்றை உண்மையுடன் பாதுகாக்கும் பொறுப்பும், அரசுக்கோ ஊடகங்களுக்கோ மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியது. உண்மையைக் காக்கும் சமூகமே, தன்னம்பிக்கையுடன் எதிா்காலத்தை உருவாக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...