இணையதளச் செய்திப் பிரிவு
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள்கள் என சந்தைகளில், குறிப்பாக ஆன்லைனில் விற்பனை செய்வது அதிகரித்து வருவது கவலைக்குரியது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த தயாரிப்புகளில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் சி, டி, துத்தநாகம் உள்ளிட்டவை இருப்பதாகவும் இதனை சாப்பிடும்பட்சத்தில் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் முக்கிய பிரபலங்கள், அதிகம் ஃபாலோயர்ஸ்களைக் கொண்டுள்ள இன்ஃப்ளூயன்சர்கள் இதனை விளம்பரப்படுத்தும்போது பலரும் அதை நம்பி வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இது முற்றிலும் தவறான வழிமுறை என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படாத பொருள்களை வாங்கி பயன்படுத்தும்போது நாள்பட்ட அழற்சி அல்லது ஆட்டோ இம்யூன் எனும் தன்னுடல் தாக்க நோய்கள் போன்ற விளைவுகள் ஏற்படலாம். இதனால் நீரிழிவு, தைராய்டு முதல் கால்களில் வீக்கம், சரும அழற்சி வரை பல பாதிப்புகள் ஏற்படலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள்கள் என்ற கூற்றுகள் 99% போலியானவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அனைத்து நோய்களுக்குமான ஒரே மருந்து என்று எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று விரைவான தீர்வுகளைத் தேடுவதற்கு பதிலாக அதற்கான உணவுப்பழக்கவழக்கம், வாழ்க்கைமுறையை மாற்றுவதன் மூலமாக பெற முடியும் என்று அறிவுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.