தைப்பூசம் அன்றும் இன்றும்...

தி. இராசகோபாலன்

தைப்பூசத்தன்றுதான், உலகம் தோன்றியதாக ஓர் ஐதீகம் உண்டு. சிவபெருமான் தமது உமாதேவியுடன் சிதம்பரம் ஞான சபையில் ஆனந்த நடனம் ஆடித் தரிசனம் தந்த புனிதநாள், தைப்பூசம் ஆகும்.

மலேசியாவில் தைப்பூசம் தேசியத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்று அந்த நாட்டின் இசுலாமிய மன்னர், பத்துமலைக் கோயிலுக்கு தரிசனத்துக்காக வருவார். அன்று அரசே முழு விடுமுறை நாளாக அறிவிக்கிறது.

தைப்பூசத்தினத்தில் அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்வது பெண்கள் கடமை! ஆண்கள் நெல்லறுக்கும் கதிர் அரிவாள், தேங்காய், கற்பூரம் ஏந்தி, வயலுக்குச் சென்று, கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி, நெற்கதிர்களை அறுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து, பொங்கல் வைப்பர்.

முருகப்பெருமான் ஞானப்பழம் கிடைக்காமல் வெகுண்டு, கயிலாயத்திலிருந்து பழநிமலைக்கு வந்து கொலுவீற்றிருப்பதால், பழநிமலை வட்டாரத்தில் வாழும் பக்தர்கள், தைப்பூசத்தை ஞானத் திரு நாளாகக் கருதி, வழிபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க..