தூதுவளையில் இவ்வளவு விஷயம் இருக்கா?

இணையதளச் செய்திப் பிரிவு

குளிர், சளி, இருமல் முதல் நினைவாற்றல் வரை பல நன்மைகள் தரும் இயற்கை மருந்து தூதுவளை. இதைக் கீரையாகப் பயன்படுத்தாமல், மூலிகையாகவே பயன்படுத்தலாம்.

3D render of a male medical figure with front of the brain highlighted

| Center-Center-Kochi

தூதுவளையை துவையலாகச் செய்து சாப்பிட்டால் தும்மல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், சளி போன்ற பிரச்னைகள் குறையும். தூதுவளையில் வைட்டமின் சி, இரும்பு உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன.

ஐந்து இலைகளுடன் சின்ன வெங்காயம், கல் உப்பு சேர்த்து நசுக்கி, சாறு எடுத்து நீருடன் கொதிக்கவைத்துக் குடித்தால் இருமல், நெஞ்சுச்சளிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தூதுவளையால் ரசம், சூப் செய்து குடித்தாலும் நெஞ்சுச் சளி விரைவில் தணியும். தொண்டையில் அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று குணமாகும். நரம்புகளையும் வலுப்படுத்தும்.

தூதுவளை இலைகளை நெய்யில் வதக்கி, துவையலாக்கி வாரத்தில் இரண்டு நாள்கள் சாப்பிட்டால் வாய்வுக்கோளாறுகள் விலகும், உடல் வலிமையும் அதிகரிக்கும்.

கைப்பிடி அளவு தூதுவளை இலைகளை மையாக அரைத்து தோசை மாவோ கோதுமை மாவோ கலந்து செய்யும் உணவுகள் தொண்டை வலி மற்றும் தொண்டை எரிச்சலைக் குறைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்