இணையதளச் செய்திப் பிரிவு
நீரிழிவு நோய் பாதிப்பால் இந்தியா இரண்டாவது அதிகபட்ச பொருளாதாரச் சுமையை எதிர்கொள்கிறது. அதாவது நீரிழிவு நோய்க்கு செலவிடுவதில் உலகளவில் இந்தியா 2 ஆம் இடத்தில் இருக்கிறது.
நீரிழிவு நோய் சிகிச்சைகளுக்கு இந்தியா 11.4 டிரில்லியன் டாலர் செலவு செய்கிறது. இந்திய மதிப்பில் ரூ. 1,048 லட்சம் கோடி ஆகும். அமெரிக்கா முதலிடத்திலும் சீனா மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.
நீரிழிவு நோய் பரவும் விகிதம், இறப்பு விகிதத்தைவிட 30-50 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதனாலே நீரிழிவு நோய் சிகிச்சைக்கு அதிகம் செலவிட நேரிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா மற்றும் சீனாவைப் பொருத்தவரை, நீரிழிவு நோயின் அதிக பொருளாதாரச் செலவுகளுக்கு அங்குள்ள அதிக மக்கள்தொகையே காரணம்.
அல்சைமர்(மறதி) அல்லது புற்றுநோயால் ஏற்படும் பாதிப்புடன் ஒப்பிடும்போது, நீரிழிவு நோயின் பொருளாதாரத் தாக்கம் மிக அதிகமாக உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பது, அதாவது வழக்கமான உடல் செயல்பாடு, சமச்சீர் உணவு, சுற்றுச்சூழல் ஆகியவை நீரிழிவு நோயைத் தடுக்க உதவும்.
2024 நவம்பரில் 'தி லான்செட்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகின் நீரிழிவு நோயாளிகளில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இந்தியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தமில்லாமல் இந்தியாவில் நீரிழிவு பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதுடன் பரிசோதனைகளை அரசுகள் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.