கல்வியும் சமூகமும்...

மருத்துவர் துரை. நீலகண்டன்

எதிர்காலத்தில் ஒருவரின் மதிப்பை நிர்ணயிப்பது அவர் பெற்ற பட்டங்கள் அல்ல; அவரது சிந்தனையின் தரம், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், அனுபவத்தின் ஆழம், புதிய மதிப்பை உருவாக்கும் ஆற்றல் ஆகியவைதான்

மனிதனின் திறனை விரிவுபடுத்த வேண்டிய செயற்கை நுண்ணறிவும் அறிவார்ந்த தொழில்நுட்பங்களும், மனித சிந்தனைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளன. தொழில்நுட்பத்தைக் கருவியாகப் பயன்படுத்த வேண்டிய மனிதன், அதன் மீது முழுமையாகச் சார்ந்திருக்கும் நிலைக்கு நகர்ந்து வருகிறான்.

இந்திய வரலாற்றில் ஸ்ரீனிவாச ராமானுஜன் இளம் வயதிலேயே கணிதத்தில் உலகையே வியக்க வைத்தார். போதிய வசதிகளும் உயர் கல்விக்கான வாய்ப்புகளும் இல்லாத நிலையிலும், தனது கணிதத் திறமையால் உலகின் தலைசிறந்த கணித மேதைகளில் ஒருவராக உயர்ந்தார்.

சுவாமி விவேகானந்தர், தனது 30 வயதுக்கும் முன்பே இந்தியாவின் ஆன்மிகச் சிந்தனையை உலக அரங்கில் எடுத்துச் சென்றார்.

படிப்பு வாழ்க்கையைத் தொடங்கு வதற்கான கதவைத் திறக்க வேண்டும்; வாழ்க்கையை ஒத்திவைப்பதற்கான காரணமாக மாறக்கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...